சாராயம் விற்ற வாலிபர் கைது

சாராயம் விற்ற வாலிபர் கைது

Update: 2022-06-09 18:59 GMT

அணைக்கட்டு

பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பாக்கெட் சாராயம் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பள்ளிக்குப்பத்தை அடுத்து பூமலை முருகர் கோவில் மலைப்பகுதியில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த வாலிபரை கையும், களவுமாக பிடித்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில், ஒடுக்கத்தூரை அடுத்து பெரிய தட்டாங்குட்டை பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 20) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்