கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
வால்பாறையில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வால்பாறை,
வால்பாறை நகராட்சி மார்க்கெட் பகுதியில் நேற்று போலீசார் போதை பொருட்கள் தடுப்பு குறித்து திடீரென சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை நடத்தினர். அப்போது ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் விற்பனை செய்வதற்காக 300 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் கஞ்சா வைத்திருந்த கக்கன்காலனி பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 29) என்பவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். வால்பாறை பகுதியில் போலீசார் தொடர்ந்து கஞ்சா தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். நகர் பகுதிகள் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.