சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சிவகாசி,
சிவகாசி பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (வயது 25). இவர் 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் உறவினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த குழந்தை திருமணம் குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், மாவட்ட சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் பிரதாப் மற்றும் 17 வயது சிறுமியிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு திருமணம் ஆனது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரி ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பிரதாப்பை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர்.