சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

சிறுமியை கர்்ப்பம் ஆக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-02 20:42 GMT

ராஜபாளையம்

ராஜபாளையம் பகுதியை சோ்ந்த ஒரு சிறுமிக்கு திருமணம் நடைபெற்று, அந்த சிறுமி தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருப்பதாக மகளிர் ஊர் நல அலுவலர் தமிழரசிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் ராஜபாளையம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் விசாரணை நடத்தி சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய செல்லப்பாண்டி (வயது 25) என்பவரை போக்சோவில் கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்