நிதி நிறுவனத்தில் தவணை தொகையை கட்டாமல் சரக்கு வாகனத்தை விற்று மோசடி செய்த வாலிபர் கைது

நிதி நிறுவனத்தில் தவணை தொகையை கட்டாமல் சரக்கு வாகனத்தை விற்று மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-06-18 18:45 GMT

ரிஷிவந்தியம், 

ரிஷிவந்தியத்தை சேர்ந்தவர் சின்னசாமி மனைவி பத்மாவதி (வயது 38). இவர், மினி சரக்கு வாகனம் ஒன்றை அதே பகுதியை சேர்ந்த சேட்டு மகன் சபீர்பாஷா, அப்துல் மகன் நுார்முகமது ஆகியோரிடமிருந்து, ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் வாங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த வாகனத்துக்கு நிதிநிறுவனத்தில் மீதமுள்ள கடன் தவணை தொகையை சபீர்பாஷா, நூர்முகமதும் கட்டிவிட வேண்டும் என முடிவு செய்ததாக தெரிகிறது. ஆனால், இருவரும் கடன் தொகையை கட்டவில்லை. இதனால் சம்மந்தப்பட்ட நிதிநிறுவனத்தின் ஊழியர்கள், பத்மாவதியிடம் இருந்த சரக்கு வாகனத்தை ஜப்தி செய்து எடுத்து சென்றனர்.

இதுகுறித்து பத்மாவதி, தன்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட சபீர்பாஷா (35), நுார்முகமது ஆகியோர் மீது ரிஷிவந்தியம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், ரிஷிவந்தியம் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சபீர்பாஷாவை (35) கைது செய்து செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்