அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-25 19:13 GMT

வி.கைகாட்டி:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே உடையவர் தீயனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலம். இவரது மகன் செல்வமூர்த்தி(வயது 26). இவர் ஒரு அரசு பஸ்சில் நேற்று முன்தினம் மாலை வந்து கொண்டிருந்தார். காட்டுப்பிரிங்கியம் வி.கைகாட்டி அருகே பஸ் வந்தபோது பஸ்சில் பயணித்த செல்வமூர்த்தி திடீரென எழுந்து பஸ் டிரைவரான கோடாலிகருப்பூர் கிராமத்தை சேர்ந்த மீனாட்சிசுந்தரத்தை தகாத வார்த்தையால் திட்டியதோடு, அவரை பணி செய்ய விடாமல் தடுத்து, பஸ் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கயர்லாபாத் போலீஸ் நிலையத்தில் டிரைவர் மீனாட்சிசுந்தரம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி வழக்குப்பதிந்து செல்வமூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்