ஆட்டோ கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது
ஆட்டோ கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை கொக்கிரகுளம் சிவன்கோவில் மேற்கு தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 60). ஆட்டோ டிரைவரான இவர் தனது வீட்டின் முன்பு கடந்த 15-ந் தேதி ஆட்டோவை நிறுத்தி இருந்தார்.
அப்போது அதே பகுதியை சோ்ந்த முத்துவேல்முருகன் (21) என்பவர் ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை கம்பால் தாக்கி உடைத்தார். மேலும் இதனை தட்டிக்கேட்ட மீனாட்சி சுந்தரத்தை தகாத வார்த்தையால் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முத்துவேல்முருகனை கைது செய்தனர்.