தொழிலாளியை கல்லால் தாக்கிய வாலிபர் கைது
ஆம்பூர் அருகே தொழிலாளியை கல்லால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூரை அடுத்த வெங்கடா சமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 40). கூலி வேலை செய்து வருகிறார். அதேப்பகுதியை சேர்ந்த அன்பரசன் (35) என்பவருக்கும், ரமேசுக்கும் இடையே ஆம்பூர் பைபாஸ் சாலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அன்பரசன் அருகே இருந்த கல்லை எடுத்து ரமேசை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரமேஷ் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அன்பரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.