மீன் வியாபாரியை கல்லால் தாக்கிய வாலிபர் கைது

மீன் வியாபாரியை கல்லால் தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-03 19:32 GMT

திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் அஜ்மீர்அலி (வயது 48). இவர் பொன்மலை அருகே மேலகல்கண்டார் கோட்டை கம்பிகேட் பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவருடைய கடைக்கு மேலகல்கண்டார் கோட்டை சாமிநாதன் நகர் பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகன்கள் சுதாகர், விஜய் (36) மற்றும் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலு ஆகியோர் மீன்வாங்க சென்றனர். அப்போது, ரூ.250 மதிப்புள்ள மீனை ரூ.100-க்கு கேட்டுள்ளனர். அஜ்மீர்அலி அதற்கு மறுக்கவே, அவர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அங்கு கிடந்த கல்லால் அஜ்மீர்அலியின் தலையில் தாக்கி கொலைமிரடல் விடுத்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அஜ்மீர்அலியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சுதாகர், விஜய், பாலு ஆகியோர் மீது பொன்மலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புசெல்வி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் விஜய் கைது செய்யப்பட்டார். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்