டெய்லரை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது
கோவில்பட்டியில் டெய்லரை தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கோவில்பட்டி:
ராஜபாளையம் அழகாபுரியை சேர்ந்த கண்ணன் மகன் முருகராஜ் (வயது41). டெய்லர். இவர் மனைவியுடன் கோவில்பட்டி காந்திநகர் அத்தைகொண்டான் பிரதான சாலையில் நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒருவாலிபர் இருவர்களையும் வழி மறித்த அரிவாளை காட்டி மிரட்டி மது அருந்த பணம் கேட்டுள்ளார். முருகராஜ் பணம் தர மறுத்துள்ளார் இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் முருகராஜை தாக்கிவிட்டு சட்டை பையில் இருந்த ஆயிரம் ரூபாயை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டாராம். இதில் காயம் அடைந்த முருகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்த புகாரின்பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறி செய்த காந்தி நகரை சேர்ந்த சங்கிலிப்பாண்டி மகன் கணேச மூர்த்தி (23) என்பவரை கைது செய்தனர்.