பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வாலிபர் கைது
உளுந்தூர்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் அதே பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் நேற்று வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள் அவரசமாக பெட்ரோல் நிரப்பும்படி கூறினர். ஆனால் ராமர் வரிசையில் வரும்படி கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இவருவரும் அவரை சரமாரியாக தாக்கினர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் படுகாயம் அடைந்த ராமரிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ராமரை தாக்கிய உளுந்தாண்டார் கோவில் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் அஜய்(வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள செங்குறிச்சியை சேர்ந்த பூமிநாதனை வலைவீசி தேடி வருகிறார்கள்.