சிறுவனை தாக்கிய வாலிபர் கைது

சிறுவனை தாக்கிய வாலிபர் கைது

Update: 2023-06-03 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 42). இவரும் அதே பகுதியை சேர்ந்த வேலுமணியும் உறவினர்கள் ஆவர். 2 சென்ட் வீட்டுமனை யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினையில் வேலுமணியின் மகன் வினோத்(33) என்பவர் பாலகிருஷ்ணன் மகன் அழகிரி(15) என்ற சிறுவனை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாலகிருஷ்ணன், விழுப்புரம் மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்