2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

ஜெயங்கொண்டம் அருகே 2-வது திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-25 18:30 GMT

தகராறு

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள அழகாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சீமான். இவரது மகன் வினோத்குமார் (வயது 33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த இளமதி என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந் தேதி வினோத்குமார் வெளிநாடு சென்று விட்டார்.

இதையடுத்து, வினோத்குமாரின் தந்தை சீமான், அவரது தம்பி ரஞ்சித்குமார், தாய் லலிதா ஆகியோர் இளமதியிடம் தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆதரவற்ற நிலையில் இருந்த இளமதி கணவர் வரும் வரை தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார்.

2-வது திருமணம்

இந்தநிலையில் கணவர் வினோத்குமார் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த செய்தி அறிந்த இளமதி தனது மாமனார்-மாமியாரிடம் கேட்டபோது எங்களுக்கு தெரியாது எனக் கூறிவிட்டனர். மேலும் வீட்டில் சென்று பார்த்தபோது அங்கு அவர் இல்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் வினோத்குமார் சென்னையில் இருப்பதாக கூறியதால் அங்கு சென்று இளமதி பார்த்தார். அப்போது அங்கு ரெஜினா என்ற பெண்ணுடன் வினோத்குமார் குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, வினோத்குமார் இளமதியை தகாத வார்த்தைகளால் திட்டி ஊருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் இந்த சம்பவம் குறித்து தனது மாமனார்-மாமியாரிடம் கேட்டபோது தாங்கள் தான் 2-வது திருமணம் செய்து வைத்ததாக கூறினர்.

கைது

Tags:    

மேலும் செய்திகள்