குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

பட்டுக்கோட்டை அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-05 20:47 GMT

தஞ்சாவூர், ஏப்.6-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் வாட்டாக்குடி தெற்கு அக்ரகார தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் நாகராஜ் (வயது 32). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் நாகராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், குண்டர் சட்டத்தில் நாகராஜை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்