மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-15 12:50 GMT

திருவாரூர்:-

திருவாரூர் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

திருவாரூர் அருகே உள்ள புலிவலம் விஷ்ணு தோப்பு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். வாட்டர் கேன் போடும் வேலை செய்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகில் நிறுத்தி விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதையடுத்து அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டபோது, முகமூடி அணிந்து வந்த ஒருவர் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

இதுகுறித்து காளிதாஸ் திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடியவரை வலைவீசி தேடி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் திருவாரூர் புலிவலம் திருவாசல் பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகன் பார்த்திபன் (வயது22) என்பவரை பிடித்து போலீசார் சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், காளிதாசின் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் பார்த்திபனை கைது செய்தனர். இவர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான மோட்டார் சைக்கிள்களை திருடியது விசாரணையில் தெரியவந்து இருப்பதாக போலீசார் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்