பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது

போடியில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-14 16:06 GMT

போடி கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மகாவிஷ்ணு (வயது 21). இவர் பிளஸ்-2 மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இதுதொடர்பாக போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து மகாவிஷ்ணுவை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்