வாலிபர் கைது

கத்தியைக் காட்டி தொழிலாளிக்கு கொலை மிரட்டல்; வாலிபர் கைது

Update: 2022-06-02 14:57 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தென்பாகம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியை சேர்ந்த சங்கர் மகன் செல்வகுமார் என்ற யானை செல்வம் (வயது 25) என்பதும், அவர் அங்கு வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து தகராறு செய்ததுடன் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செல்வகுமார் மீது ஏற்கனவே தென்பாகம் போலீஸ் நிலையத்தில் மேலும் 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்