காலையில் குட்மார்னிங், இரவில் குட்நைட்....! புகார் கொடுக்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை...! போலீஸ்காரர் சஸ்பெண்டு

காலையில் குட்மார்னிங், இரவில் குட்நைட் என நீண்ட இந்த மெசேஜ் நாளடைவில் பாலியல் ரீதியாக மாறியது. போலீஸ்காரரின் தொல்லையால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்

Update: 2023-05-29 11:01 GMT

பெரம்பூர்:

செம்பியம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் வினோத்குமார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பூரை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர் நிலம் தொடர்பாக புகார் தெரிவிக்க செம்பியம் போலீஸ் நிலையத்துக்கு சென்றார்.

இந்த புகாரை ஆரம்பத்தில் போலீஸ்காரர் வினோத்குமார் விசாரித்ததாக தெரிகிறது. அப்போது இளம்பெண்ணின் செல்போனை பெற்ற அவர் அடிக்கடி உருக உருக மெசேஜ் அனுப்ப தொடங்கினார்.

காலையில் குட்மார்னிங், இரவில் குட்நைட் என நீண்ட இந்த மெசேஜ் நாளடைவில் பாலியல் ரீதியாக மாறியது. போலீஸ்காரரின் தொல்லையால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அவர் போலீஸ்காரர் வினோத்குமாரை கண்டித்ததாக தெரிகிறது. எனினும் இதனை போலீஸ்காரர் வினோத்குமார் கண்டுகொள்ளாமல் இளம்பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியான குறுஞ்செய்திகளை தொடர்ந்து அனுப்பி வந்தார். இதனால் இளம்பெண் போலீஸ்காரரின் மெசேஜ் மற்றும் போன்களுக்கு பதில் அளிப்பதை நிறுத்தினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் வினோத்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டார். இதனால் இளம்பெண்ணின் கணவருக்கும், போலீஸ்காரருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது.

பின்னர் போலீஸ்காரர் வினோத்குமார் அங்கிருந்து சென்று விட்டார். இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த போலீஸ்காரர் வினோத்குமாரை சஸ்பெண்டு செய்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்