குடும்பத் தகராறில் இளம் பெண் தற்கொலை

குடும்பத் தகராறில் இளம் பெண் தற்கொலை

Update: 2023-04-04 18:45 GMT

சரவணம்பட்டி

தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது35). திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (21). இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் கோவை கோவில்பாளையம் பகுதியில் வசித்து வந்தனர். சதீஷ்குமார் வெல்டிங் வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் உடையவர்.

இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று ஏற்பட்ட தகராறில் வாழ்க்கையில் வெறுப்படைந்த புஷ்பா வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து தெரிவித்தனர். மேலும் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்