உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அத்திப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சந்திரலேகா( வயது 20). பி.எஸ்சி. பட்டதாரி. பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். சம்பவத்தன்று அவரது தந்தை, வீட்டு வேலைகளை ஏன் செய்யவில்லை என்று கூறி, அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்திரலேகா, எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரலேகா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.