அ.தி.மு.க.வில் சேருவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் -ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேச்சு
அ.தி.மு.க.வில் சேருவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
திருப்பரங்குன்றம்,
அ.தி.மு.க.வில் சேருவதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பரங்குன்றத்தில் மதுரை புறநகர் அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து நிர்வாகிகள் இடையே ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மதுரை புறநகர் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளரும், திருப்பரங்குன்றம் பகுதி செயலாளருமான வக்கீல் ரமேஷ் தலைமை தாங்கினார். திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அமைப்பு செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் வழங்கி பேசினார்.
இளைஞர்கள் ஆர்வம்
அப்போது அவர் பேசியதாவது, கட்சிக்கு உறுப்பினர்கள்தான் ஆணி வேர். கட்சிக்கு உற்ற துணையாக இருப்பவர்கள் அவர்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயக்ககூடிய அ.தி.மு.க. இயக்கம். அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக இணைத்து கொள்வதில் இளைஞர்கள், பெண்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதியிலும் தலா 1 லட்சம் வீதம் 3 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவார்கள். உறுப்பினர்கள் சேர்க்கையில் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டும். புதிய உறுப்பினர்களாக சேரக்கூடியவர்களிடம் கையெழுத்தும், செல்போன் எண்ணும் அவசியம் வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பெரியபுள்ளான் எம்.எல்.ஏ., கலை பிரிவு மாவட்ட செயலாளர் அரசு, ஒன்றிய செயலாளர்கள் தக்கார் பாண்டி, பொன் ராஜேந்திரன், கார்சேரி கணேசன், வட்ட செயலாளர்கள் எம்.ஆர்.குமார், பொன் முருகன், திருநகர் பாலமுருகன், பாலா என்ற பாலமுருகன், கருத்த முத்து, காசிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.