விபத்தில் காயமடைந்த வாலிபர் சாவு

விபத்தில் காயமடைந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-06-24 18:48 GMT

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் கொத்தன்குளம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் தனுஷ் (வயது 18). இவர் கடந்த 19-ந்தேதி அப்பகுதியைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் மற்றும் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

கருங்குளம் டாஸ்மாக் குடோன் அருகில் சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த தனுஷை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தனுஷ் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்