ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பொன்னன்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆறுமுகநயினார். இவரது மகன் செல்வகுமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலையில் வேலையை முடித்துவிட்டு பொன்னன்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். இந்நிலையில் அவர் இரவு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. வீட்டில் உள்ளவர்கள் அவரை தேடிவந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மதியம் அவர் இறந்த நிலையில் தாமிரபரணி ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். அவர் குளிக்கும் போது ஆற்றில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீவைகுண்டம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.