கொண்டலாம்பட்டி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி மீன் பிடிக்க சென்ற போது பரிதாபம்

கொண்டலாம்பட்டி அருகே மீன் பிடிக்க சென்ற வாலிபர், ஏரியில் மூழ்கி பலியானார்.

Update: 2022-05-31 21:24 GMT

கொண்டலாம்பட்டி,

மீன் பிடிக்க சென்றவர்

சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நாழிக்கல்பட்டி கிராமம் கொழிஞ்சிப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் கலையரசன் (வயது 25). இவர் பட்டு கடையில் குமாஸ்தாவாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் நேற்று முன்தினம் மீன் பிடிப்பதற்காக பூலாவரி ஏரிக்கு சென்று உள்ளார். அங்கே ஏரியில் மீன் பிடித்து கொண்டிருந்த போது தவறி தண்ணீரில் விழுந்து விட்டார். இந்த நிலையில் கலையரசனை காணவில்லை என அவரது பெற்றோர் தேடி உள்ளனர். அப்போது அவரது மொபட் ஏரி ஓரமாக நிறுத்தப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் அங்கிருந்தவர்களை விசாரித்தனர்.

உடல் மீட்பு

அப்போது அவர் மீன் பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் சந்தேகமடைந்த உறவினர்கள் இதுபற்றி சூரமங்கலம் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏரியில் மூழ்கி பலியான கலையரசனின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்