தி.மு.க. புதிய நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
சோளிங்கர் ஒன்றிய தி.மு.க. புதிய நிர்வாகிகள் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் மதிய ஒன்றிய தி.மு.க. செயலாளராக பூர்ண சந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளராக வி.எம்.சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் அசோகன் தலைமையில், கருமாரியம்மன் கோவிலில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக சென்று அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார்கள். இதில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜ், நகர செயலாளர் கோபி, ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி ஷாஷிகுமார் மற்றும் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.