முதியோர் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
முதியோர் உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், தமிழக அரசின் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை மற்றும் ஆதரவற்ற விதவை உதவித்தொகை பெற விரும்பும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். ஆதார் அட்டை, கலர் புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எண், குடும்ப அட்டை, கைப்பேசி எண் ஆகிய உரிய அசல் ஆவணங்களுடன் அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று ஆன்லைனில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, தெரிவித்துள்ளார்.