அரசு ஆஸ்பத்திரியில் நுண் கதிர்வீச்சாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

அரசு ஆஸ்பத்திரிகளில் நுண் கதிர்வீச்சாளர், பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

Update: 2022-08-19 16:39 GMT

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள தென்காசி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் காலியாக உள்ள நுண் கதிர்வீச்சாளர் பணியிடம் மற்றும் ஆய்க்குடி, புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ள பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலச்சங்கம் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நுண்கதிர்வீச்சாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் சி.ஆர்.ஏ., டி.ஆர்.டி.டி. கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருடம் பல் மருத்துவரிடம் உதவியாளராக பணி புரிந்தமைக்கான அனுபவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் வருகிற 24-ந்தேதி மாலை 5 மணிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ இணை இயக்குனர் நலப்பணிகள் அலுவலகம், தென்காசி அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரி வளாகம், தென்காசி என்ற அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மாலை 5 மணிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்