மானியத்துடன் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
மானியத்துடன் ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உறைவிப்பான் மற்றும் குளிர்விப்பான் போன்ற உபகரணங்கள் கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைத்து வருவாய் ஈட்டிட ஒரு நபருக்கு திட்டதொகை ரூ.3 லட்சத்தில் மானியம் ரூ.90,000 வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில்பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 65-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் தாட்கோ திட்டத்தின் கீழ் இதுவரை மானியம் எதுவும் பெற்றிருக்க கூடாது, கூடுதல் செலவினத்தை ஈடுசெய்யவும் மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய, ஆதிதிராவிடர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.2¼ லட்சம் மானியமும், மற்றும் பழங்குடியினர் தனி நபர்களுக்கான திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சமாக ரூ.3¾ லட்சம் மானியமும் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர், தாட்கோ, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பத்தூர் மாவட்டம் என்ற முகவரில் தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.