ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-22 18:45 GMT

நாகை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாள் என கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாணவர் சேர்க்கை

நாகை மாவட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் நல மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30-ந்தேதி கடைசி நாள்

நாகை மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி விடுதிகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி(வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும்.

விண்ணப்பதாரர்கள் tnadw.hms.in என்ற இணைய தளம் மூலமாகவே அல்லது நேரடியாகவோ அல்லது காப்பாளர் உதவியுடனோ விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்