கடவுளை நம்பாதவருக்கும் இந்து மதத்தில் இடம் உள்ளது; இது தான் சனாதன தர்மம்- அண்ணாமலை

கடவுளை நம்பமாட்டேன்.... பொட்டு வைக்கமாட்டேன்.... குங்குமம் வைக்கமாட்டேன்... (என்றாலும்) உங்களுக்கும் இந்து மதத்தில் வாழ்வியல் முறையில் இடம் உள்ளது என அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2022-09-21 14:00 GMT

சென்னை,

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

மதம் என்ற அடிப்படையே கோட்பாடு தான். எல்லா மதமும் பார்த்தீர்களானால் இந்த மத கோட்பாடுகளை பின்பற்றவில்லை என்றால் இந்த மதத்தை நீங்கள் சார்ந்தவர் கிடையாது. இஸ்லாமிய மதத்தில் தரூம் முல் ஹர்ப் என்று சொல்கின்றோம். அதாவது, இஸ்லாமிய மதத்தின் சில சடங்குகளை நீங்கள் பின்பற்றவில்லை, அந்த மதத்திற்கு எதிரியாக இருந்தால் உங்கள் மீது பக்துவாவில் இருந்து அனைத்துவிதமான விஷயங்களையும் செய்ய முடியும் என்று அந்த மதம் சொல்கிறது.

அதேபோல கிருஸ்தவ மதத்தை எடுத்துக்கொண்டால் 3-ம் நூற்றாண்டில் சிலுவையில் அறைதலை பார்த்தோம் சிலுவை போரை பார்த்தோம்.

ஆனால், இந்து மதமும் ஜைன மதமும் மட்டும்தான் அனைத்து விதமான கருத்துக்களையும் ஒருங்கிணைக்கிறது. காரணம் மதம் என்ற வார்த்தையை இப்போது பயன்படுத்துகிறீர்கள்.

இந்து என்பது ஒரு வாழ்வியல் முறை. ஒரு வழிபாட்டு நெறி. இதிலே கோட்பாடுகள் கிடையாது. இந்து மதத்தில் கடவுளை நம்பாதவருக்கும் இந்து வாழ்வியல் முறையில் இடம் உள்ளது. நான் கடவுளை நம்பமாட்டேன்... பொட்டு வைக்கமாட்டேன்... குங்குமம் வைக்கமாட்டேன்... (என்றாலும்) உங்களுக்கும் இந்து மதத்தில் வாழ்வியல் முறையில் இடம் உள்ளது. இது தான் இன்றியமையாத சனாதனதர்மம். இதை திரும்பத்திரும்ப திருத்திப்பேசி... திரும்பத்திரும்ப மாற்றிப்பேசி இதன் மூலமாக அரசியல் லாபம் கிடைக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து செய்வது அதை பற்றி எந்த தலைவர்களும் பேசுவது கிடையாது' என்றார்.



Tags:    

மேலும் செய்திகள்