சுல்தான்பேட்டை
வா.சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் தலைமையில் சுல்தான்பேட்டை அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியின்போது, யோகா மூலம் உடல்நலம் பாதுகாக்கப்படுவது பற்றியும், உடலுறுப்புகள் சீராக செயல்படுவது பற்றியும் எடுத்துக்கூறப்பட்டது. மேலும் சுல்தான்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து கல்வி நிலையங்களிலும் யோகா பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
முடிவில் சிறந்த மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு சம்பந்தமான உபகரணங்கள் பரிசளிக்கப்பட்டது. முன்னதாக பள்ளி வளாகத்தில் சித்த மருத்துவம், மூலிகை செடிகள் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் சித்த மருந்துகள் இடம்பெற்று இருந்தது. இதில் யோகா பயிற்றுனர் பத்ரம்மாள், பாபு மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.