அரசு பள்ளிகளில் யோகா தின விழா
பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் யோகா தின விழா நடைபெற்றது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் யோகா தின விழா நடைபெற்றது.
யோகா தின விழா
பொள்ளாச்சி அருகே உள்ள ஆர்.பொன்னாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று உலக யோகா தின விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் பாரிஸ் பேகம் தலைமை தாங்கினார். மாணவர்களுக்கு யோகா, கராத்தே கற்றுக்கொடுக்கப்பட்டது. சிறப்பாக யோகா செய்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கற்றலில் மட்டுமே கவனம்
பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு பல்வேறு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. மனதை ஒருமுகப்படுத்தி, கற்றலில் மட்டுமே கவனத்தை செலுத்த யோகா உதவுகிறது என்று தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி பேசினார். மாணவர்கள் பத்மாசனம், சக்ராசனம், தனுசாசனம், வஜ்ராசனம் காலபைரவ ஆசனம் உள்ளிட்ட ஆசனங்களை செய்து காட்டினர்.
விழிப்புணர்வு
வேட்டைக்காரன்புதூர் அரசு சித்த மருத்துவமனையில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் சித்த மருத்துவர் நல்லதம்பி யோகாவின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் அரசு ஆஸ்பத்திரி இயற்கை மருத்துவ பிரிவு டாக்டர் கார்த்திகேஷ் மாணவர்களுக்கு யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.