உலக சமுதாய சேவை சங்கம்-வேளாளர் கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பங்கேற்பு

உலக சமுதாய சேவா சங்கம், திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி சார்பில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பங்கேற்றார்.

Update: 2022-06-21 21:20 GMT

ஈரோடு

உலக சமுதாய சேவா சங்கம், திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி சார்பில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி பங்கேற்றார்.

சர்வதேச யோகாதினம்

சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை உற்சாகமாக கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் யோகாசன நிகழ்ச்சிகள் நேற்று நடத்தப்பட்டது.

ஈரோட்டில் உலக சமுதாய சேவா சங்கம், திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தினம் வேளாளர் கல்லூரி கஸ்தூரிபா காந்தி கலையரங்கில் நேற்று காலை நடந்தது.

வெண்ணிற ஆடை

ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தலைமை தாங்கி, யோகாசனத்தை தொடங்கி வைத்தார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் முன்னிலை வகித்தார். விழாவில் வேளாளர் மகளிர் கல்லூரியில் படிக்கும் 200 மாணவிகள் வெண்ணிற ஆடை அணிந்து யோகாசனங்கள் செய்து காண்பித்தார்கள்.

நிகழ்ச்சியில் வேளாளர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், ஒளிரும் ஈரோடு தலைவர் அக்னி எம்.சின்னச்சாமி, ஜெய்சூர்யா நிறுவன நிர்வாக இயக்குனர் டி.நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நலவாழ்வு

முன்னதாக கல்லூரி முதல்வர் செ.கு.ஜெயந்தி வரவேற்றார். முடிவில் உலக சமுதாய சேவா சங்க ஈரோடு மண்டல தலைவர் வி.எம்.வெங்கடாசலம் நன்றி கூறினார்.

யோகாதினம் பற்றி உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் கூறும்போது, பிரதமர் மோடியின் முயற்சியால் ஐ.நா.சபை சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மனிதகுலம் முழுமையும் நலவாழ்வு பெற்று ஆரேக்கியத்தோடும், அமைதியோடும் வாள வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டு உள்ளது என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்