சர்வதேச யோகா போட்டியில் மாணவன் சாதனை

சர்வதேச யோகா போட்டியில் மாணவன் சாதனை படைத்துள்ளார்.

Update: 2022-06-12 18:39 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே மேலச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஸ்மித்ரன் சேதுபதி சர்வதேச அளவில் நேபாளத்தில் நடைபெற்ற யோகாசன போட்டியில் நேபாளம் மலேசியா சிங்கப்பூர் உட்பட 7 நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து 140 பேர் யோகாசன போட்டியில் கலந்துகொண்டனர். இதில் 4 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 20 பேர் கலந்துகொண்டனர். யோகாவில் சக்ராசனம், தனுராசனம், உஷடராசனம், விபரி தண்டாசனம், புஷங்காசனம் செய்து மாணவன் ஸ்மித்ரன் சேதுபதி தங்கப்பதக்கம் வென்று தமிழ் நாட்டிற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். கிராமத்திற்கு வந்த அவரை மேலச்செல்வனூர் ஊராட்சி தலைவர் மகரஜோதி கோபாலகிருஷ்ணன், யோகா பயிற்சியாளர் சுகன்யா சரவணகுமார், தி.மு.க. நிர்வாகிகள் ராஜசேகர பாண்டியன், ராஜகோபால், சிதம்பரம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்