உலக நன்மை வேண்டி மஞ்சள்நீர் அபிஷேகம்

உடன்குடி அருகே, உலக நன்மை வேண்டி மஞ்சள்நீர் அபிஷேகம் நடந்தது.

Update: 2023-08-05 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள சிதம்பரபுரத்தில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் மஞ்சள்நீர் அபிஷேக விழா நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும், நாட்டில் மழை பெய்து, விவசாயம், வியாபாரம் செழிக்க வேண்டியும், குடும்பங்களில் அமைதி, ஒற்றுமை நிலவ வேண்டியும் இந்த விழா நடந்தது. இதையொட்டி விலாமிச்சை வேர், வெட்டிவேர், பச்சை கற்பூரம், மஞ்சள் பொடி ஆகியவற்றை வீடுகளில் உள்ள நிறைகுட தண்ணீரில் போட்டு, பூஜை அறையில் வைத்து 2 நாட்கள் பூஜை செய்யப்பட்டது. 3-ம் நாளில் அதை ஊர்வலமாக எடுத்து வந்து பிரம்மசக்தி அம்மனுக்கு பெண்கள் சார்பில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர்கள் விமலா, பெரியபிராட்டி, அன்னபாக்கியம், பார்வதி, ஜெயா, கலைச்செல்வி, மாவட்ட பொறுப்பாளர் கேசவன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்