சிதம்பரம் அருகேஉளுந்து பயிரில் மஞ்சள் நோய் தாக்குதல்விவசாயிகள் கவலை

சிதம்பரம் அருகே உளுந்து பயிரில் மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

Update: 2023-04-01 18:45 GMT

அண்ணாமலை நகர், 

சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி, பெராம்பட்டு, திட்டுக்காட்டூர், மடத்தான்தோப்பு, ஜெயங்கொண்டப் பட்டினம் உள்ளிட்ட பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் விவசாயிகள் உளுந்து சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் இப்பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிப்படைந்தன. மேலும் இப்பகுதியில் உளுந்து செடிகளில் பூ, பிஞ்சு வைக்கும் பருவத்தில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உளுந்து பயிரில் லாபம் கிடைக்கும் என எண்ணியிருந்த விவசாயிகளுக்கு இந்த நோய் தாக்குதல் கவலையை ஏற்படுத்தி உள்ளது. எனவே, வேளாண் அதிகாரிகள் சிவபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்உள்ள பயிர்களை நேரடியாக பார்வையிட்டு, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கி, அவர்கள் மகசூல் ஈட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்