சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் மஞ்சள்பெட்டி ஊர்வலம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-08-26 19:33 GMT

திசையன்விளை:

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் மஞ்சள்பெட்டி ஊர்வலம் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுடலை ஆண்டவர் கோவில்

தென் மாவட்டங்களில் உள்ள சுடலை கோவில்களில் புகழ்பெற்றது திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் ஆகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா கடந்த 21-ந்தேதி தொடங்கி 6 நாட்கள் நடந்தது.

விழா நாட்களில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், ெஹல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம், கோலப்போட்டி, சமய சொற்பொழிவு, பல்சுவை கலைநிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரிகள், நாடகம், மாறுவேட போட்டி, 1008 சுமங்கலி பூஜை, திருவிளக்கு பூஜை, மெகந்தி போட்டி, சமையல் போட்டி, அலங்கார பூஜை, வில்லிசை, அற்புதவினாயகர் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

மஞ்சள்பெட்டி ஊர்வலம்

விழாவின் சிகர நாளான நேற்று காலை மன்னர் ராஜா கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க கரகாட்டம், கதகளியாட்டம், பொய்க்கால் யானை முன்செல்ல புறப்பட்ட மஞ்சள்பெட்டி ஊர்வலம் முக்கிய வீதிவழியாக சென்று கோவிலை அடைந்தது. தொடர்ந்து சுவாமி மஞ்சள் நீராடுதல் நடந்தது.

முன்னதாக நடந்த மஞ்சள் பெட்டி ஊர்வலத்தில் திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்க தலைவர் ஆனந்தராஜ், பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயக்குமார், கவுன்சிலர் நடேஷ் அரவிந்த், பா.ஜனதா மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்சாமி, வியாபாரிகள் சங்க பேரமைப்பு மாநில இணை செயலாளர் தங்கையா கணேசன், பேரமைப்பு திசையன்விளை தலைவர் சாந்தகுமார், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், தொழில் அதிபர்கள் தங்கையா முருகேசன், தங்கையா ஜி.பி.எம்.குமார், திவாகர், சுடலையாண்டி, கனகராஜ், அருண் சபரி, சகாதேவன், மலையாண்டி, பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் ராம்குமார் துரைப்பாண்டியன், வியாபாரிகள் சங்க பேரமைப்பு பகுதி செயலாளர் சண்முகவேல் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். இரவு கோவில் வளாகத்தில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சேம்பர் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். கொடை விழாவை முன்னிட்டு நேற்று திசையன்விளையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்