தானியங்கி எந்திரம் மூலம் ரூ.10-க்கு மஞ்சள் பை

கள்ளக்குறிச்சியில் தானியங்கி எந்திரம் மூலம் ரூ.10-க்கு மஞ்சள் பை கலெக்டர் தொடங்கி வைத்தார்

Update: 2023-04-11 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வாழ்வாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மாற்று பொருட்களை பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிறு கண்காட்சி அரங்குகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் திறந்து வைத்தார்.

பின்னர் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்துவதை ஊக்கப்படுத்தும் வகையில் தானியங்கி எந்திரம் மூலம் ரூ.10-க்கு மஞ்சள் பை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறும்போது, மஞ்சள் பை தேவைப்படும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தானியங்கி எந்திரத்தில் ரூ.10-ஐ செலுத்தி பையை பெற்றுக் கொள்ளலாம். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய பஸ் நிலையங்களில் தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத இயற்கையான பொருட்களை பயன்படுத்தி மாசு இல்லாத மாவட்டமாக கள்ளக்குறிச்சியை உருவாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வகுமார், உதவி பொறியாளர் இளையராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்