ரூ.14 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.14 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

Update: 2022-11-26 16:35 GMT

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 100 முதல் ரூ.8 ஆயிரத்து 366 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.5 ஆயிரத்து 702 முதல் ரூ.6 ஆயிரத்து 212 வரையிலும் ஏலம் போனது.

மொத்தம் 400 மஞ்சள் மூட்டைகள் ரூ.14 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்