வருடாபிஷேகம் விழா

முதுகுளத்தூர் அருகேகூத்தபெருமாள் அய்யனார் கோவிலில் வருடாபிஷேகம் விழா நடைபெற்றது.

Update: 2023-05-08 18:45 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தில் உள்ள கூத்தபெருமாள் அய்யனார் கோவிலில் வருடாபிஷேகம் விழா விமரிசையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள், தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து கூத்தபெருமாள் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், அலங்காரம் நடந்தது. அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. தர்மர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும், முதுகுளத்தூர், பரமக்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்