பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம்
பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 16-வது ஆண்டு வருடாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் மூலவர் சிவன், அகிலாண்டேஸ்வரி அம்பாள் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும், ஆனந்தவல்லி சமேத சந்திரசேகர் உற்சவர் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் சிவாச்சாரியார், உதவி சிவாச்சாரியார் முல்லை ஆகியோர் நடத்தினர். இதில் முன்னாள் அறங்காவலர்கள், தர்ம பரிபாலின சங்க நிர்வாகிகள், இறைநெறி கழகத்தினர், தின வழிபாட்டு குழுவினர், பிரதோஷ வழிபாட்டு குழுவைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் தர்ம பரிபாலன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.