யாதவர் பண்பாட்டு கழக பொதுக்குழு கூட்டம்
யாதவர் பண்பாட்டு கழக பொதுக்குழு கூட்டம் நடந்தது.
நெல்லை மாவட்ட யாதவர் பண்பாட்டு கழக கல்வி அறக்கட்டளையின் 57-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மற்றும் பரிசளிப்பு விழா பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நடைபெற்றது.
அறக்கட்டளை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் குத்தாலிங்கம், இணைச்செயலர் ராமசாமி ஆகியோர் வரவேற்றனர். பொருளாளர் பாபநாசம் அறிக்கை வாசித்தார்.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக தலைவர் தேவநாதன் யாதவ், பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஸ்டேட் வங்கி முன்னாள் இயக்குனர் வானமாமலை ஆகியோர் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற யாதவர் சமூக மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.
இதில் வல்லநாடு முத்து, ஆலங்குளம் முன்னாள் யூனியன் தலைவர் அம்மாசி, நல்நூலகர் முத்துகிருஷ்ணன், உதவி தலைவர் சுப்பையா, உதவி செயலர் ராமசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.