பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர்

பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த ஜெராக்ஸ் கடைக்காரர்

Update: 2023-04-08 18:45 GMT

கோவை

பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண்களை செல்போனில் ரகசிய மாக வீடியோ எடுத்ததாக ஜெராக்ஸ் கடைக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் தன்னை தாக்கியதாக 2 வாலிபர்கள் மீது புகார் அளித்தார்..

இளம்பெண்களின் வீடியோ

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராமு (வயது 41). இவர் தற்போது கோவை பாப்பநாயக்கன்பாளையம் நேதாஜி நகரில் வசித்து வருகி றார். மேலும் இவர், தனது வீட்டு அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். அங்கு நேற்றுமுன்தினம் சவுரிபாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஜெராக்ஸ் எடுக்க சென்றார்.

அப்போது ராமு தனது கடைக்கு வந்த ஒரு இளம்பெண்ணை ரகசியமாக தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதை பார்த்த கல்லூரி மாணவர், கடைக்காரர் ராமுவை கண்டித் தார். மேலும் அவர், ராமுவின் செல்போனை வாங்கி பார்த்தார். அப்போது ராமுவின் செல்போனில் கல்லூரி மாணவிகள், இளம் பெண்களின் வீடியோ மற்றும் புகைப்படம் இருந்தது தெரியவந்தது. மேலும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆபாச வீடியோக்களும் இருந்ததாக தெரிகிறது.

வழக்கு பதிவு

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கல்லூரி மாணவர், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். இதை அறிந்த கடை உரிமையாளர் ராமு தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். ஆனாலும் புகாரின் பேரில் ராமுவின் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கடைக்கு வந்த பெண்களை புகைப்படம், வீடியோ எடுத்து மிரட்டினாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ஜெராக்ஸ் கடைக்காரர் ராமு ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது கடைக்கு 2 வாலிபர் கள் வந்தனர். அவர்கள், கல்லூரி மாணவிகளின் வீடியோக்கள் எனது செல்போனில் உள்ளது என்று கூறினர்.

விசாரணை

மேலும், எனது செல்போனை சோதனை செய்ய வேண்டும் என்று கேட்டனர். நான் செல்போனை கொடுக்க மறுத்தேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் என்னை கீழே தள்ளி செல்போனை பறித்தனர். இதில் எனக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இது குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்