சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு
விழுப்புரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது.
விழுப்புரம்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறையில் காலியாக உள்ள 444 சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை, ஆண், பெண் மற்றும் திருநங்கை) பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் காவல்துறையில் பணியில் இருப்பவர்களுக்கு இன்று விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை 275 பேர் எழுதினர். இதை விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் பார்வையிட்டனா்.