கடலூரில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு 170 போலீஸ்காரர்கள் எழுதினர்

கடலூரில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 170 போலீஸ்காரர்கள் எழுதினர்.

Update: 2022-06-26 16:41 GMT

சப்-இன்ஸ்பெக்டர் பதவி

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமத்தால், காலியாக உள்ள 444 பணியிடங்களுக்கான நேரடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நேற்று தொடங்கியது. இதில் காலை 10 மணிக்கு நடந்த பொது அறிவுத்தேர்வை 7,557 பேர் தேர்வு எழுதினர். பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு நடந்த தமிழ் மொழிக்கான தகுதித்தேர்வை மாவட்டத்தில் 7,656 பேர் எழுதி இருந்தனர்.

போலீஸ்காரர்களுக்கான எழுத்து தேர்வு

இந்த நிலையில் இன்று காவல் துறையில் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இதற்காக கடலூா் மாவட்டத்தில் தோ்வு எழுதுவதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்தை சோ்ந்த 176 ஆண்களும், 37 பெண்களும் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அமைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தேர்வர்கள் காலை 8 மணியளவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு வரத்தொடங்கினர்.

தொடர்ந்து காலை 10 மணிக்கு எழுத்து தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. இதில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 213 பேரில் 170 பேர் தேர்வு எழுதினர். இதற்கிடையே ஐ.ஜி. ராதிகா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் தேர்வு மையத்திற்கு வந்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்