அரியலூர் மாவட்டம், திருமானூரில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகே காட்டுக்குள் இருந்து தப்பி வந்த மான் ஒன்று அடிபட்டு கிடந்துள்ளது. இதனை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கால்நடை மருத்துவர் அருண் மற்றும் வனத்துறை காவலர் லூகாஸ் மானை பரிசோதனை செய்தனர். நாய்கள் கடித்து மான் காயம் அடைந்திருக்கலாம் என மருத்துவர் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து அதற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வனத்துறையினர் பத்திரமாக மீட்டு மானை கொண்டு சென்றனர்.