பிரகதாம்பாள் கோவிலில் ஆராதனை இசை விழா

பிரகதாம்பாள் கோவிலில் ஆராதனை இசை விழா நடைபெற்றது.

Update: 2023-02-07 18:43 GMT

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் சமேத கோகர்ணேஸ்வரர் கோவிலில் 9-ம் ஆண்டு ஆராதனை இசை விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் தலைமை தாங்கினார். மங்கள இசை, வீணை இசை, கீபோர்டு, பக்தி இசை பாடல்கள் மற்றும் குரல் இசை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறுவன் கிருத்திக்ஹரிஷின் கீபோர்டு வாசிப்பும், 3 வயது சாய்சிவாவின் மிருதங்கம் இசையும் பார்வையாளர்களை கவர்ந்தது. இசை கச்சேரியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமிகள், மாணவ மாணவிகளுக்கும் இசை பயிற்சி ஆசிரியர்களுக்கும் விழா குழுவின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர்.ராமதாஸ் தலைமையில் முரளி, காயத்திரிதேவி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்