காவிரி நீருக்கு பூக்கள் தூவி வழிபாடு

திருவையாறில் காவிரி நீருக்கு பூக்கள் தூவி வழிபாடு நடத்தப்பட்டது.

Update: 2023-06-17 21:49 GMT

திருவையாறு:

டெல்டா மாவட்டம் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது. கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர் திருக்காட்டுப்பள்ளி, சாத்தனூர், மருவூர், வடுககுடி, தில்லைஸ்தானம் ஆகிய பகுதிகளை கடந்து திருவையாறுக்கு நேற்று வந்தது. திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து காவிரி நீரில் பாலைஊற்றி தீபாராதனை காண்பித்தனர். பினனர் மலர் தூவியும், தேவார பாடலை பாடியும் காவிரி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்