குடற்புழு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குடற்புழு ஒழிப்பு விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-02-14 18:45 GMT

பரமக்குடி,

பரமக்குடி சவுராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குடற்புழு ஒழிப்பு விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, துணைத்தலைவர் குணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நாகராஜன் வரவேற்றார். சப்-கலெக்டர் அப்தாப் ரசூல் தொடங்கி வைத்தார். அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் பிரதாப் குமார், தாளாளர் அமரநாதன், உதவி தலைமை ஆசிரியர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்