விளாத்திகுளம் பள்ளியில் உலக யோகா தினம்
விளாத்திகுளம் பள்ளியில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளியில் உலக யோகா தின நிகழ்ச்சி அம்பாள் வித்யாலயா கல்வி நிறுவனத்தின் சார்பில் உலக யோகா தின நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அனிதா மார்க்கண்டேயன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஆபிரகாம் வசந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மூச்சு பயிற்சி, சூரிய நமஸ்காரம் என பல்வேறு யோகாசனங்களை மாணவ, மாணவிகள் செய்தனர்.